வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐ.நா.: இஸ்ரோல் ஹமாஸ் போர் தொடர்பாக ஐ.நா., பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் அமைச்சர் மற்றும் தூதர் ஐ.நா, பொதுச்செயலர் பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் இதுவரை பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து ஐ.நா., பொதுச்செயலர் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசுகையில், காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை என்றார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், பாலஸ்தீன மக்கள் மீதான 56 ஆண்டுகளாக அடைக்குமுறையே போருக்கு காரணம். இதனை நிறுத்த முயற்சிக்காத ஐ.நா., பொதுச்செயலர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இனி ஐ.நா.,தூதர்களுக்கு இஸ்ரேல் விசா வழங்காது. இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement