India
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு; அரசுக்கு ரூ.2,546 கோடி கூடுதல் செலவு

சென்னை: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 42 சதவீதத்தில் இருந்து, 46 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.


அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை, இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை, படிப்படியாக நிறைவேற்ற, அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிக்கும்போதே, தமிழக அரசும் அதை பின்பற்றி, அகவிலைப்படி உயர்த்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் வாயிலாக, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிதாரர்கள் பயன் பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 2,546 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news

- த.அமிர்தகுமார்,

மாநில தலைவர், அரசு அலுவலர்கள் ஒன்றியம்.

மகிழ்ச்சி!

ஏற்கனவே உத்தரவாதம் அளித்தபடி, நிலுவையின்றி அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உத்வேகத்துடன் பணிபுரிவதற்கு உந்து சக்தியாக இருக்கும். சங்கத்தின் சார்பில், முதல்வருக்கு நன்றி.